Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை எறிவதாக அக்தர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்

Shoaib Akhtar
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பந்தை எறிகிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் கூறியுள்ளது.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று சோயப் அக்தருக்கும், சர்ச்சைகளுக்கும் எப்போதும் அதிகம் நெருக்கம் உண்டு.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சகவீரர் முகமது ஆசிப்பை பயிற்சியின் போது பேட்டை வைத்து அடித்ததற்காக அவரை 20-20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நாடு திரும்ப அழைத்ததுடன் சில போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

தற்போது அந்த தடை நீங்கி இந்தியா சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்த சுற்றுப் பயணத்தில் நடந்து முடிந்த 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய அக்தரின் பந்து வீச்சு எறிவது போல் இருக்கிறது என்று இந்திய வீரர்கள் நடுவர்களிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் இது குறித்து தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டதால் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்திய வீரர்களின் புகார் குறித்து இந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,

சோயப் அக்தரின் பந்து வீச்சு பற்றி இந்திய வீரர்கள் தங்களுடைய சந்தேகத்தை கூறியிருக்கிறார்கள். விதிமுறைகளை மீறி அவருடைய பந்து வீச்சு இருப்பதால் இதைப்பற்றி நாங்கள் சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் (ஐசிசி) புகார் அளிப்போம் என்றார்.

ஒவ்வொரு போட்டியிலும் அக்தர் விக்கெட்டுகளை எடுக்கிறாரோ இல்லையோ, சர்ச்சைகளை மட்டும் தவறாமல் அள்ளி விடுகிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+