For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரிதாபமான நிலையில் இந்திய அணி.. 109 ரன்களுக்கு சுருண்டது ரோகித் படை.. ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு

இந்தூர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு சுருண்டது. டாஸ் வென்ற ரோகித் சர்மா, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதை நம்பி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுலுக்கு பதில் சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதில் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசசை ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனையடுத்து, சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்ததும், மொத்த காட்சிகளும் மாறியது.

 தடுமாறிய இந்தியா

தடுமாறிய இந்தியா

ரோகித் சர்மா 12 ரன்களில் ஸ்டம்ப் அவுட்டாக, சுப்மான் கில் சிலிப்பில் கேட்ச் ஆனார். இதே போன்று புஜாரா எதிர்கொண்ட பந்து நன்றாக திரும்பி போல்ட் ஆக்கியது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர் பவுன்ஸ் ஆகாத பந்தை அடிக்க முயன்று எட்ஜ் ஆகி போல்ட் ஆனார். இதனால் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 18 ரன்கள் சேர்ப்பதற்குள் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்தது.

கோலி

கோலி

இதனையடுத்து நட்சத்திர வீரர் விராட் கோலி, கேஎஸ் பரத்துடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார். 25 ரன்கள் இந்த ஜோடி சேர்த்த நிலையில், விராட் கோலி முர்ஃபி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.இதே போன்று பரத் 17 ரன்கள் மட்டுமே அடித்தார்.

 109 ரன்கள்

109 ரன்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் 12 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 3 ரன்கள் மட்டுமே சேர்க்க, உமேஷ் யாதவ் 2 சிக்சர்களை விளாசி 17 ரன்கள் எடுக்க இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மாத்தீவ் குஹன்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வருகின்றனர்.டிராவிஸ் ஹேட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லாபஸ்சேன் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஜடேஜா பந்தில் பால்ட் ஆக, அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் குறைவாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர்.

Story first published: Wednesday, March 1, 2023, 13:58 [IST]
Other articles published on Mar 1, 2023
English summary
India all out for 109 vs australia in 3rd test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+