Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொயீன் அலியால்தான் மூன்றாவது டெஸ்டில் தோற்றோம்: டோணி 'வாக்குமூலம்'

லண்டன்: சுழல்பந்து வீச்சாளர் மொயீன் அலியை ஆதிக்கம் செலுத்த விட்டதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டை இந்தியா வென்றது. இந்நிலையில் சவுதாப்டனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது இந்திய அணி.

எதிர்பார்த்தோம்

எதிர்பார்த்தோம்

தோல்வி குறித்து டோணி நிருபர்களிடம் கூறியதாவது: 2வது டெஸ்ட் போட்டியை போலவே, அடுத்த போட்டியிலும் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நான் மனக்கோட்டை கட்டவில்லை. இங்கிலாந்து மீண்டும் வீறு கொண்டு எழுந்து வரும் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம்.

பவுலிங் சரியில்லை

பவுலிங் சரியில்லை

இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக, ஆட்டத்தின் சில பகுதிகளில் நாங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தெரிந்து கொண்டேன். 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். ஆனால் இப்போட்டியில் நாங்கள் 10 விக்கெட்டுகளை கூட வீழ்த்தவில்லை. இதுதான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும்.

மொயீன் அலியை கட்டுப்படுத்தவில்லை

மொயீன் அலியை கட்டுப்படுத்தவில்லை

இந்திய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டனர். ஆனால் சுழல் பந்து வீச்சாளர் மொயீன் அலியை, ஆதிக்கம் செலுத்தவிட்டுவிட்டோம். சரியான அளவில், உயரத்தில் பந்து வீச அவரை அனுமதித்து நாங்கள் தவறு செய்துவிட்டோம். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக செயல்பட்டு, சரியான அளவில் பந்து வீச முடியாதபடி செய்திருந்தால் மொயீன் அலியால் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது.

அடுத்த டெஸ்டிலும் இஷாந்த் இல்லை

அடுத்த டெஸ்டிலும் இஷாந்த் இல்லை

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. அடுத்த போட்டிக்கான பிட்ச் நிலவரத்தை கணித்து, அதற்கேற்ப 5 பவுலர்களுடன் களமிறங்குவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

Story first published: Friday, August 1, 2014, 15:45 [IST]
Other articles published on Aug 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+