Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாகிஸ்தானை விட இந்தியா எப்போதும் ஒரு படி மேலே தான்”.. இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா பேச்சு

துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை விட இந்திய அணியே எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்கும் என்று இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா கூறி உள்ளார்.

சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் இந்தியா 14 வெற்றிகளையும், பாகிஸ்தான் வெறும் 3 வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளன. நடப்பு தொடரில் இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிக அழுத்தம் இன்றி ஆட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்திய அணியை வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

India Always One Step Ahead of Pakistan Deepti Sharma Confident Before Asia Cup T20 Match

இந்தப் போட்டிக்கு முன்னதாக பேசிய தீப்தி சர்மா, ஆசிய கோப்பை மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிரான எந்த ஆட்டத்திலும் இந்தியா எப்போதும் ஒரு படி முன்னேறி நிற்கும் என்றார். மேலும் எதிரணியின் பந்துவீச்சை பற்றி யோசிக்காமல் தங்களது பலத்தின் மீதே கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். அணியில் ஒருவருக்கு நல்ல நாளாக அமையும்போது அவர் ஆட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாகவும், மற்றவர்கள் நேர்மறையான ஆதரவு தருவதாகவும் கூறினார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணி வலுவான சமநிலையுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே கஞ்சா புகை.. அமெரிக்க ஓபன் ஆட்டத்தை பாதியில் நிறுத்திய உலகின் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா

ஒரே கஞ்சா புகை.. அமெரிக்க ஓபன் ஆட்டத்தை பாதியில் நிறுத்திய உலகின் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா

2026 ஆசிய கோப்பை தொடரில் தீப்தி சர்மா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் இந்திய அணியில் முக்கிய பந்துவீச்சாளராக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணி ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.

இந்திய அணியில் ட்விஸ்ட்.. பும்ராவுக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட பவுலர்.. பிசிசிஐ முன்னெச்சரிக்கை

Also Read

இந்திய அணியில் ட்விஸ்ட்.. பும்ராவுக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட பவுலர்.. பிசிசிஐ முன்னெச்சரிக்கை
Story first published: Saturday, September 5, 2026, 9:05 [IST]
Other articles published on Sep 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+