For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறிச்சு வச்சுக்கோங்க... இந்தியாவுடன் பைனலில் இந்த அணி மோத போகுது..? முன்னாள் வீரர் கணிப்பு

லண்டன்: உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் தான் மோதும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கணித்துள்ளார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி விட்டது.

ஆனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் நிலை பரிதாபமாக உள்ளது. இதுவரை இங்கிலாந்து அணி ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இங். நெருக்கடி

இங். நெருக்கடி

எனவே இங்கிலாந்து எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் அது இங்கிலாந்து அணிக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அடுத்த 2 போட்டிகளில் வலுவான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

2 போட்டிகளில் வெற்றி

2 போட்டிகளில் வெற்றி

இங்கிலாந்து, இந்த 2 போட்டிகளில் ஒன்றில் தோற்று, அதேநேரத்தில் பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும். எனவே, கடுமையான சிக்கலில் இருக்கிறது இங்கிலாந்து.

பைனலில் யார்?

பைனலில் யார்?

எனவே உலக கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசி. அணிகளின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இறுதி போட்டியில் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. எந்தெந்த அணிகள் மோதும்? எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

பைனலில் இந்தியா

பைனலில் இந்தியா

இந்நிலையில், இந்த உலக கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடப்பு சாம்பியன் ஆஸி. உலக கோப்பைக்கு முன்பு வரை பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அந்த அணி தோற்ற ஒரே போட்டி இந்தியாவுக்கு எதிரானதுதான். இந்தியாவிடம் மட்டுமே தோல்வி அடைந்தது என்றார்.

Story first published: Saturday, June 29, 2019, 20:28 [IST]
Other articles published on Jun 29, 2019
English summary
India and Australia will enter in to world cup final says former player vvs laxman .
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+