தொடரை இழந்த இந்தியா.. குவிந்த சாதனைகள்.. 3வது ஒரு நாள் போட்டியின் முக்கிய அம்சங்கள்!
Recommended Video

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?- வீடியோ
லண்டன்: இந்திய இங்கிலாந்து அணிக்கிடையான கடைசி ஒருநாள் போட்டியின் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது:
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இப்போட்டியில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்/சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அதிக சதம் - இப்போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களில் முதல் இடம் பிடித்தார்.
முதல் தோல்வி - இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் தொடரை இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக தொடர்ச்சியாக 9 தொடர்களில் வெற்றி வாகை சூடியிருந்தது இந்திய அணி.
எட்டாவது தொடர் வெற்றி - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து பெறும் எட்டாவது தொடர் வெற்றி இதுவாகும்.
அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் - இப்போட்டியில் ரூட் - மோர்கன் ஜோடி குவித்த 186* ரன்கள் ஆனது இந்திய அணிக்கெதிராக இங்கிலாந்து குவித்த அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ஆகும்.
சுழலில் தடுமாற்றம் - இந்திய கேப்டன் கோஹ்லி மூன்று போட்டிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்களால் அவுட் ஆக்கப்பட்டார்.
அதிவேக 3000 - குறைந்த போட்டிகளில் ஒரு அணியின் கேப்டனாக விரைவாக 3000 ரன்களை குவித்த வீரர். 49 போட்டிகளில் இதனை படைத்தார்.
9 விக்கெட் - ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் 9 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சேர்ந்து மொத்தம் 7 விக்கெட்களையே வீழ்த்த முடிந்தது.
Story first published: Thursday, July 19, 2018, 12:08 [IST]
Other articles published on Jul 19, 2018


Click it and Unblock the Notifications