Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை பெய்தால் என்ன? இந்தியா, நியூசி வீரர்கள் ஆடிய ஆட்டம்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நட்பு

வெல்லிங்டன் : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணி வீரர்களும் செய்த காரியம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் எந்த வம்புக்கும் போகாமல் அமைதியாக கிரிக்கெட் மட்டும் விளையாடி ரசிகர்களை சேர்த்தவர்கள்.

ஆனால் கடந்த காலங்களாக இந்தியாவுக்கு நியூசிலாந்து எமனாக இருக்கிறது .

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

குறிப்பாக 2019ஆம் ஆண்டு அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தான் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதேபோன்று 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இதேபோன்று ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

இதனால் நியூசிலாந்து அணி என்றாலே இந்திய ரசிகர்கள் அச்சப்பட தொடங்கி விட்டனர். நியூசிலாந்து அணியை பார்க்கும் போதெல்லாம் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்பு இடையே இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோத இருந்த முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

ஆட்டம் ரத்து

ஆட்டம் ரத்து

காலை 11:30 மணிக்கு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என வீரர்கள் காத்திருந்தனர் இதனால் இந்திய நிரப்படி மதியம் இரண்டு மணி நேரம் ஆகியும் மழை நிற்கவில்லை இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் இரு அணி வீரர்களுக்கும் bore அடிக்க தொடங்கி விட்டது.

விளையாடிய வீரர்கள்

விளையாடிய வீரர்கள்

இதனை அடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்தில் உள்ளே ஃபுட் வாலிபால் விளையாடத் தொடங்கினர். அதாவது வாலிபால் போல் இரு அணிகளாக நின்று காலால் தூக்கி அடித்து இந்த போட்டியை விளையாடினர். இரு அணி வீரர்களும் அவ்வளவு நட்பாக ஒருவருக்கொருவர் விளையாடிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதன் மூலம் இரு அணி ரசிகர்களும் ஒருவருக்கொருவர் களத்தில் மோதிக்கொண்டாலும் வெளியே நட்பு பாராட்டி வருவது ரசிகர்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது முதல் ஆட்டம் பத்தான நிலையில் இரண்டாவது t20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.

Story first published: Friday, November 18, 2022, 20:06 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+