Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. ஆசிய விளையாட்டில் ஒரு பந்து கூட ஆடாமல் செமி பைனல் முன்னேற்றம்

நிஷின்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் காலிறுதி ஆட்டம் கொட்டித் தீர்த்த கனமழையால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச டி20 தரவரிசை விதிகளின் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆப்கானிஸ்தான் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது காலிறுதி ஆட்டம் செப்டம்பர் 28 அன்று காலை நடைபெற இருந்தது. ஆனால் காலை முதலே அங்கு விடாது பெய்த பலத்த மழையால் ஆடுகளம் முழுவதும் ஈரமானது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை தொடர்ந்து நீடித்ததால், ஆடுகளத்தை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நடுவர்கள் போட்டியை முழுமையாக கைவிடுவதாக அறிவித்தனர்.

India and Pakistan Advance to Asian Games 2026 Semifinals After Rain Washouts

ஆசிய விளையாட்டுப் போட்டி விதிமுறை சொல்வது என்ன?

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் தொடரில் காலிறுதி அல்லது அரையிறுதி போன்ற நாக்-அவுட் ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டால், 'சூப்பர் ஓவர்' அல்லது மாற்று நாள் கிடையாது. மாறாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 தரவரிசையில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ, அந்த அணியே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
தற்போதைய சர்வதேச டி20 தரவரிசையில் இந்திய அணி உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 10வது இடத்தில் இருக்கிறது. இந்த விதியின் அடிப்படையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. போட்டியில் விளையாடாமலேயே தோற்ற ஏமாற்றத்துடன் ஆப்கானிஸ்தான் நாடு திரும்புகிறது.

பாகிஸ்தானுக்கும் ஜாக்பாட்

இதேபோன்று அதிகாலை நடைபெற இருந்த முதல் காலிறுதி ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. அதில் ஹாங்காங் (24வது இடம்) அணியை விட தரவரிசையில் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி (6வது இடம்) நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒரே நாளில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே விளையாடாமல் அரையிறுதிக்கு சென்றுள்ளன.

செஞ்சுரி அடித்த கோலி, கில்லுக்கு ஒண்ணுமில்ல... 4 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது!

செஞ்சுரி அடித்த கோலி, கில்லுக்கு ஒண்ணுமில்ல... 4 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்டநாயகன் விருது!

அரையிறுதியில் இந்தியாவின் எதிரணி யார்?

நடப்பு சாம்பியனான இந்திய அணி, அடுத்ததாக நடைபெற உள்ள இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும்.

Story first published: Monday, September 28, 2026, 10:00 [IST]
Other articles published on Sep 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+