For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வருகிறது இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்...கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்... எங்கு? எப்போது தெரியுமா?

மும்பை: நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் டி20 தொடரை ரசிகர்கள் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான தொடரில் விளையாடி வருகிறது. இதன் பிறகு ஐபிஎல், இங்கிலாந்து தொடர் என பிசியாக உள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திட்டம்

திட்டம்

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட், டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் போட்டி தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்ற நோக்கில் 2 நாட்டு அணிகளுடன் டி20 தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.

எப்போது

எப்போது

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி தொடர் இந்தாண்டு இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் 6 நாட்கள் மொத்தம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் போட்டி எங்கு நடத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஏக்கம்

ஏக்கம்

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

டி20 விருந்து

டி20 விருந்து

இரு நாட்டு பிரச்னை காரணமாக ஆசியக்கோப்பை , உலகக்கோப்பை போன்ற ஐசிசி நடத்தும் தொடர்களில் 2 அணிகளும் மோதி வருகின்றன. நீண்ட நாட்களாக இதுபோன்ற சர்வதேச கோப்பைக்கான தொடர்களில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்தாக அமையலாம். இது சரியாக நடைபெற்றால் 2023ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்பதற்கான சிக்கல் நீங்கவும் வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, March 24, 2021, 21:53 [IST]
Other articles published on Mar 24, 2021
English summary
India and Pakistan Could battle on bilateral T20I series in 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+