Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 15 நாட்களுக்குள் 3 முறை மோதிக்கொள்ள வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Recommended Video

Asia Cup 2022 தொடரின் முழு அட்டவணை வெளியானது *Cricket

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

9 மாதங்களாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து காத்துள்ளது

ஆசியக்கோப்பை தொடர்

ஆசியக்கோப்பை தொடர்

இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய அணி காத்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டுமே குரூப் ஏ பிரிவில் தான் இடம்பெற்றுள்ளன. எனவே லீக் சுற்றில் வழக்கம் போல வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ஒருமுறை இரு அணிகளும் மோதிக்கொள்ளும். இதனைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்று நடைபெறவிருக்கிறது.

2வது மோதல் எப்போது

2வது மோதல் எப்போது

ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகும். அந்த வகையில் ஏ குரூப்பில் 3வது அணியாக சிறிய அணிதான் இருக்கும் என்பதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். இந்த சுற்றில் தேர்வான அணிகள் தங்களுக்குள் மீண்டும் ஒருமுறை மோதிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் போட்டியில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளலாம்.

3வது முறையாக மோதல்

3வது முறையாக மோதல்

சூப்பர் 4 சுற்றில் இருந்து 2 அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகிவிடும். நடப்பாண்டு தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தான் இருப்பதிலேயே பலமான அணிகளாக உள்ளன. இவை இரண்டும் இலங்கை, ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தி வந்துவிட்டால், செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் 3வது முறையாக மோதிக்கொள்ளலாம்.

Story first published: Thursday, August 4, 2022, 13:21 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+