Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவா? பாகிஸ்தானா? SENA நாடுகளில் ஆசிய அணிகள் எத்தனை டெஸ்டில் வென்று இருக்கிறது?

மும்பை : இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி வரும் ஐந்து மாதங்கள் முழுக்க முழுக்க டெஸ்ட் போட்டி மட்டும்தான் விருந்தாக இருக்கப் போகிறது. கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே பிடிக்கும். வீரர்களின் பொறுமை, திறமை, உடல் வலு என அனைத்தையும் சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தான் இருப்பதிலேயே மிகவும் கடினமான போட்டியாகும்.

அதுவும் ஆசிய அணிகளுக்கு வெளிநாடுகளில் சென்று டெஸ்டில் விளையாடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஆசிய அணிகள் எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடி பழக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட ஆசிய அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இதனால்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ஆசிய அணிகள் ஜெயிப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். இந்திய அணி இத்தனை காலமாக கிரிக்கெட் விளையாடியும் தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை.

ஆசிய அணி வீரர்களுக்கு வேகப்பந்து வீச்சு மட்டும் ஒரு தடையாக இருக்காது. கூடவே பந்து ஸ்விங் ஆவதால் அதனை எதிர்கொள்வது ஆசிய பேட்ஸ்மன்களுக்கு நரக வேதனையாக இருக்கும். இதே போல் தான் வெளிநாட்டு வீரர்களும் ஆசிய கண்டத்திற்கு வந்து சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள். இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அது முடிந்தவுடன் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் அடுத்த எட்டு மாதங்களில் இந்திய அணி வெளிநாடுகளில் 10 முக்கிய டெஸ்ட்களில் விளையாட இருக்கிறது. இந்த சூழலில் சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ,ஆஸ்திரேலியா நாடுகளில் ஆசிய அணிகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை பாகிஸ்தான் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்தியா அதிகபட்சமாக 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இலங்கையும் வங்கதேசமும் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இந்திய அணி ஒன்பது போட்டிகளில் தான் இங்கிலாந்து மண்ணில் வென்று இருக்கிறது. இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் நான்கு டெஸ்ட்களில் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் வங்கதேச அணி ஒரு முறை கூட இங்கிலாந்தில் டெஸ்டில் வென்றது இல்லை. நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்களில் பாகிஸ்தான் 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியா ஐந்து போட்டிகளிலும், இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போல் வங்கதேசமும் ஒரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மண்ணில் வெற்றியை ருசித்து இருக்கிறது. தென்னாப்பிரிக்கா மண்ணில் பாகிஸ்தான் இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி அதிகபட்சமாக ஐந்து டெஸ்டிலும், இலங்கை அணி மூன்று டெஸ்ட்களிலும், தென்னாப்பிரிக்கா மண்ணில் வென்றிருக்கிறது.

ஆனால் வங்கதேச அணி இதுவரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றது இல்லை. பாகிஸ்தான அணி இந்த நான்கு நாடுகளிலும் சேர்த்து 29 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும் வங்கதேச அணி ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 12, 2024, 22:49 [IST]
Other articles published on Sep 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+