Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வார்னேவுக்காக இந்திய அணியின் மரியாதை.. வீரர்களின் உருக்கமான வார்த்தை.. கண்ணீர் விட்ட ரசிகர்கள்!

மொஹாலி: ஷேன் வார்னேவின் மறைவு செய்தியை அறிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர்.

Recommended Video

Warne's Rockstar Jadeja Hits Ton against Sri Lanka | IND vs SL 1st Test | OneIndia Tamil

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அவருக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி அஞ்சலி

இந்திய அணி அஞ்சலி

அந்த வகையில் இன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போதே வார்னேவுக்காக பெரும் கவுரவத்தை அளித்தனர். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் ஒன்றாக நின்று வார்னேவுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது வார்னேவின் புகைப்படம் திரையில் ஒளியிட, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.

 ஜடேஜாவுடன் நெருக்கம்

ஜடேஜாவுடன் நெருக்கம்

ஷேன் வார்னேவின் மறைவில் மிகப்பெரிய இழப்பு ஜடேஜாவுக்கு உண்டு எனக்கூறலாம். ஏனென்றால் ஜடேஜாவுக்கு ராக்ஸ்டார் என்ற பட்டம் கொடுத்தவர் வார்னே தான். இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜடேஜா, வார்னே இறந்துவிட்டார் என்ற செய்தியில் அதிர்ச்சியாக உள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் கோலி

அதிர்ச்சியில் கோலி

வார்னேவின் மறைவு குறித்து நேற்றே இந்திய வீரர்கள் சிலர் உருக்கமான பதிவுகளை செய்திருந்தனர். விராட் கோலி, வாழ்வில் என்ன நடக்கும் என்பதை கணிக்கவே முடியவில்லை. கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் இன்று இல்லை என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என பதிவிட்டிருந்தார்.

ரோகித் சர்மா ட்வீட்

ரோகித் சர்மா ட்வீட்

இதே போல ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், என் மனம் எப்படி வாடுகிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, எங்கள் விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் இன்று விடைப்பெற்றுள்ளார். இன்னும் இது பொய்யாக இருக்கக்கூடாதா என்று மனம் கேட்கிறது எனக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, March 5, 2022, 21:58 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+