Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI 4th T20 நாளை அமெரிக்காவில் பலப்பரீட்சை.. 2 வீரர்கள் தலை மீது தொங்கும் கத்தி

அமெரிக்கா : இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை அமெரிக்காவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் தொடரை சமன் செய்ய இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India and west indies fighting for series win in florida

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா செய்த தவறால் தோல்வியை தழுவினாலும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. எனினும் நாளைய போட்டியிலும் இந்திய அணி அதை ஃபார்முடன் விளையாட மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

இந்தத் தொடர் முழுவதும் ஒரு போட்டியை தவிர கில் பெருசாக எதையும் சாதிக்கவில்லை. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவர் அகமதாபாத்தை தாண்டினாலே சுமாராக தான் விளையாடுகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த பேச்சுக்கெல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நாளை ஆட்டத்தில் அவர் அதிரடியை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லையேனில் அவருக்கு பதிலாக இஷான் கிசின் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைப்போன்ற அறிமுக வீரராக களம் இறங்க ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடும் முற்பட்டு ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது. இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமாரும் டி20 கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை.

மேலும் அக்சர் பட்டேலும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்தால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் அவருக்கு 15 பேர் கொண்ட அணியிலாவது இடம் கிடைக்கும். சாஹல் மற்றும் குல்தீப் இருவரும் நன்றாக பங்கு வீசி வந்தாலும் அவர்களுக்கு வேகப் பந்துவீச்சாளர்களின் துணை சுத்தமாக இல்லை.

சஞ்சு சாம்சனும் தனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தால், அதனை அவர் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே டி20 கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும். இப்படி இந்திய அணிக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. இதனை எல்லாம் சூரிய குமாரையாகவும் மற்றும் திலக் வருமா ஆகியோர் பேட்டிங்கில் சரி செய்தால் மட்டுமே இந்திய அணிக்கு நாளைய போட்டியில் வெற்றி வாய்ப்பு கிட்டும். பிளேயிங் லெவனில் நாளை ஆட்டத்தில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, August 11, 2023, 21:06 [IST]
Other articles published on Aug 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+