For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த டிராவிட்.. உலககோப்பையை வெல்ல இப்படி இறங்கிட்டாங்களே?

மும்பை : உலகக் கோப்பை தொடரை இந்தியா வெல்லுமா இல்லை தோல்வியை தழுவுமா என ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர். சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெற்ற இந்திய அணி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் துளி கூட இல்லை.

அதற்கு காரணம் இந்திய அணியின் நிர்வாகம் எடுக்கும் முடிவு மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இல்லாததும் தான். மேலும் அணியில் இடம் பெற்றிருக்கும் நடு வரிசை வீரர்களும் மற்ற இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தடுமாறி வருவதும் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.

India asking bcci to provide spin track for world cup matches

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு இல்லை. மேலும் இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் டி20 கிரிக்கெட் போல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர்.

இதனால் 350 ரன்களுக்கு மேல் அடித்தால் கூட அதனை ஈசியாக சேசிங் செய்யும் நிலைமை தான் இருக்கிறது. வெறும் இந்தியாவின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இந்தியா பல முக்கிய போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. இந்த நிலையில் உலகக் கோப்பையை வெல்ல தங்களுடைய கடைசி பிரம்மாஸ்திரத்தை இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளது.

எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா தயாரிக்கிறதோ அதேபோல் உலகக் கோப்பை தொடரையும் அணுக இந்தியா முடிவெடுத்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய அணிகளை எதிர் கொள்ளும் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்துக் கொடுங்கள் என இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது.

அதன்படி சென்னையில் ஆஸ்திரேலியா உடனும் தர்மசாலாவில் நியூசிலாந்துக்கு எதிராகவும் கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் லக்னோவில் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்திய அணி போட்டிகளில் விளையாடுகிறது. இந்த மைதானங்களில் எல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளை தயாரித்து கொடுங்கள் என இந்திய அணி கேட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த அணிகளை எளிதில் வீழ்த்தி விட முடியும் என இந்தியா கணக்குப் போட்டு இருக்கிறது. மேலும் அவர்களிடமும் தலைசிறந்த சுழற் பந்துவீச்சை சார்ந்தவர்கள் இல்லாதது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 10, 2023, 6:00 [IST]
Other articles published on Aug 10, 2023
English summary
India asking bcci to provide spin track for world cup matches கடைசி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த டிராவிட்.. உலககோப்பையை வெல்ல இப்படி இறங்கிட்டாங்களே?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+