வாட்சன், டிம் பெய்ன் அபார ஆட்டம்-வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
மொஹாலி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர் அந்தஅணியின் ஷான் வாட்சனும், டிம் பெய்னும்.
இவர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 428 ரன்களைக் குவித்துள்ளது.
சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரரான ஷான் வாட்சன் 126 ரன்களைக் குவிக்க, கடைசி வரிசையில் இறங்கிய டிம் பெய்ன், அதிரடியாக ஆடி 92 ரன்களைக் குவித்தார். அவரும் ஜான்சனும் சேர்ந்து கடைசி நேரத்தில் ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலியா பாதுகாப்பான இடத்திற்குப் போய் விட்டது.
இறுதியில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலியா 428 ரன்களைக் குவித்தது.
இந்தியத் தரப்பி்ல ஜாகிர் கான் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. கம்பீர் 25 ரன்களில் ஆட்டமிழக்க வீரேந்திர ஷேவாக்கும், டிராவிடும் ரன் குவிக்கும் பொறுப்பை ஏற்றனர்.
ஷேவாக் அதிரடியாக ஆடினார். அரை சதத்தைக் கடந்து அவர் ஆடி வருகிறார். டிராவிட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாலரை மணி நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications