For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் ஆட சொன்னா கபடி ஆடுற? ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஸ்ரேயாஸ்.. இதுக்கு சாம்சனே தேவலாம்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சொதப்பியது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

உலகக்கோப்பை தொடரில் யார் இடம் பெற போகிறார்கள் என்பதை தீர்மானிக்க ஆஸ்திரேலிய தொடர் ஒரு ஒத்திகை மேடையாக இந்திய அணி நிர்வாகம் அணுகி உள்ளது.

India Australia 1st odi - Shreyas iyer scored only 3 runs and wasted chance

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் நம்பர் ஐந்தாவது வீரராக யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து திரும்பி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடினால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என கருதப்பட்டது.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இன்று 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்து விட்டார். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேட்டிங்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் சிங்கிள் தேடினார்.

அப்போது நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக பில்டர் இடமே பந்தை அடித்து விட்டு அதனை பார்க்க கூட இல்லாமல் பாதி தூரம் ஓடிவிட்டார். எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லாம் சும்மா இருப்பார்களா என்ன கேமரான் கிரீன் பந்தை பிடித்து அழகாக விக்கெட் கீப்பிரிடம் கொடுக்க, அவர் ரன் அவுட்டை கச்சிதமாக செய்து முடித்து விட்டார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பி இருக்கிறார்.இதேபோன்று பில்டிங்கிலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு எளிய கேட்சையும், ஒரு கடினமான கேட்சையும் தவறவிட்டார்.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில ஆட்டங்களை எஞ்சியுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இப்படி வீண் அடிப்பது அவருடைய எதிர்காலத்திற்கு சரி கிடையாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கி விட்டு அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Friday, September 22, 2023, 20:32 [IST]
Other articles published on Sep 22, 2023
English summary
India Australia 1st odi - Shreyas iyer scored only 3 runs and wasted chance கிரிக்கெட் ஆட சொன்னா கபடி ஆடுற? ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஸ்ரேயாஸ்.. இதுக்கு சாம்சனே தேவலாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+