For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 பந்தில் 3 விக்கெட்டு.. ஆஸ்திரேலியாவை ஓட விட்ட அஸ்வின்.. கும்ப்ளே சாதனை முறியடிப்பு

இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஏழு பந்துகள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசினர்.

India australia 2nd odi match - R Ashwin picks 3 wickets with in 7 balls

இதனை அடுத்து கேப்டன் ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சரும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று சூரிய குமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில் மேத்யூ ஷாட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை லாபர்சன் மற்றும் வார்னர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டனர்.

இதை அடுத்து மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதன் பிறகு போட்டி 33 ஓவராக குறைக்கப்பட்டு இலக்கு 317 ரன்கள் என மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாட முற்பட்டார். 39 பந்துகளில் அவர் 53 ரன்கள் கடந்தார். டேவிட் வார்னர், லாபர்சேனும் அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஷார்ட் ஆடுவது போல் முயற்சி செய்து அஸ்வின் கவனத்தை திருப்ப முயன்றனர்.

India australia 2nd odi match - R Ashwin picks 3 wickets with in 7 balls

ஆனால் அஸ்வின் தன்னுடைய அறிவுக் கூர்மையான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தண்ணீர் காட்டினார்.முதலில் அஸ்வின் பந்தை கணிக்க தவறிய லாபர்சேன் 27 ரன்களில் கிளீன் போல்ட் ஆனார். இதன்பிறகு டேவிட் வார்னர் அஸ்வின் பந்தில் ரிவர் ஸ்வீப் ஆடுகிறேன் என்ற பெயரில் பந்தை தவறவிட்டார். அது நேராக காலில் பட கிளீன் எல் பி டபிள்யூ ஆக மாறியது. இதன்பிறகு அந்த அணியின் அதிரடி வீரர் ஜாஸ் இங்கிலீஷும் 6 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆகினார்

இதன் மூலம் 7 பந்துகள் இடைவெளியில் அஸ்வின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்தார். அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 142 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் அஸ்வின் தற்போது 144 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் அஸ்வினுக்கு உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 24, 2023, 21:38 [IST]
Other articles published on Sep 24, 2023
English summary
India australia 2nd odi match - R Ashwin picks 3 wickets with in 7 balls 7 பந்தில் 3 விக்கெட்டு.. ஆஸ்திரேலியாவை ஓட விட்ட அஸ்வின்.. கும்ப்ளே சாதனை முறியடிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+