For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கில்.. உன்னால மட்டும் எப்படி முடியுது.. 2 ஒருநாள் போட்டியிலும் ஒரே பந்தில் ஒரே மாதிரி சாதனை

இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஒரு அசத்தலான மைல் கல்லை எட்டினார். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது. மேலும் மைதானம் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் எவ்வளவு இலக்கை நிர்ணயித்தாலும் அதனை இரண்டாவதாக சேசிங் செய்யும் அணி இலக்கை எளிதில் எட்டும்.

India australia 2nd odi - Shubman gill achieved the milestone on same delivery

மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருப்பதால் பந்து வீச முடியாத சூழல் ஏற்படும். இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி ,பெரிய ரன்களை எடுக்க வேண்டிய பொறுப்பில் இறங்கியது. இதில் முதல் ஓவரிலே ருதுராஜ் இரண்டு பவுண்டரிகள் அடிக்க முதல் ஓவரில் மட்டும் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. எனினும் ருதுராஜ் 8 ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு கில் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

தன்னுடைய ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில்லும் ஸ்ரேயாஸ் ஐயரும் போட்டி போட்டுக் கொண்டு ரன்களை சேர்த்தனர். வழக்கம்போல் அபாரமாக விளையாடிய கில் 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்கள் கடந்தால் இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் கில் ஒரு சாதனையை படைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது முதல் ஒருநாள் போட்டியிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஒரே பந்தில் அவர் அரை சதம் கடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் கில் 37 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் தற்போதும் அவர் அதே 37 பந்துகளை எடுத்துக்கொண்டு அரை சதம் கடந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏனென்றால் மைதானத்தின் பவுண்டரி அளவு வெறும் 55 மீட்டர் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 24, 2023, 16:00 [IST]
Other articles published on Sep 24, 2023
English summary
India australia 2nd odi - Shubman gill achieved the milestone on same delivery கில்.. உன்னால மட்டும் எப்படி முடியுது.. 2 ஒருநாள் போட்டியிலும் ஒரே பந்தில் ஒரே மாதிரி சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+