ராஜ்காட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 34 பந்துகளில் எல்லாம் 56 ரன்கள் எடுத்து சிறந்த தொடக்கத்தை அளித்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஒயிட்வாஷை தவிர்க்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்த ஆட்டம் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ராஜ்கோட்டில் மைதானம் 56 மீட்டர் தூரத்தில் தான் பவுண்டரி அமைந்திருக்கிறது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் 400 ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது. இங்கு இதுவரை மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டி நடைபெற்றிருக்கிறது.
இந்த மூன்று போட்டியிலுமே பேட்டிங் முதல் செய்த அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் டேவிட் வார்னர் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடி ரன்களை டேவிட் வார்னர் பௌண்டரி சிக்ஸர்களுடன் விளாசினார். 32 பந்துகளில் எல்லாம் வார்னர் அரை சதத்தை கடந்தார்.வார்னர் ஆறு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என இந்தியாவின் பந்துவீச்சை பறக்க விட்டார்.

இதனால் வார்னரை எப்படி கட்டுப்படுத்தப் போவது என ரோகித் சர்மா தடுமாறிய நிலையில் மறுமுனையில் நட்சத்திர வீரர் விராட் கோலி கூலாக நின்று சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மேலும் வார்னர் பவுண்டரி அடித்தவுடன் விராட் கோலி அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் விராட் கோலி சாக்லேட் சாப்பிட்டதன் பின் ஒரு காரணம் இருக்கிறது.
அந்த சாக்லேட் வீரர்களுக்கு குளுக்கோஸ் எனர்ஜி தரும் ஒரு சாக்லேட் ஆகும். வெயிலில் வீரர்கள் நிற்பதால் தண்ணீர் சத்து குறைபாடு ஏற்படும். இதனால் இந்த சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் புத்துணர்ச்சியுடன் களத்தில் செயல்பட முடியும் என்பதற்காகவே விராட் கோலி இவ்வாறு அடிக்கடி சாக்லேட் சாப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.