Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவே அடிவாங்கும் போது யாரு சாமி இவன்? 400 ரன் பிட்சில் 48 ரன் மட்டுமே விட்டு கொடுத்த தமிழக வீரர்

ராஜ்காட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறிய நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் பிரமாதமாக பந்து வீசி நெருக்கடியை ஏற்படுத்தினார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில் ராஜ்கோட் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

India australia 3rd odi - Washington sundar gives away only 48 runs in 10 overs

ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் இது என்பதால் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. வார்னர் 56 ரன்களிலும், மிட்செல் மார்ஸ் 96 ரன்களிலும், ஸ்மித் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்னும் சொல்லப் போனால் ஆஸ்திரேலிய அணி 6.1 ஓவரில் எல்லாம் 50 ரன்களையும் 11.4 ஓவர்களில் எல்லாம் 100 ரன்களையும் கடந்தது.

இதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கடுமையாக தடுமாறினர். குறிப்பாக பும்ரா ஐந்து ஓவர்களில் எல்லாம் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதை போன்று முகமது சிராஜ், 6 ஒவர்கள 46 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 5 ஓவர்களில் 45 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். குல்தீப் ஐந்து ஓவரில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இப்படி இந்திய வீரர்கள் அனைவரும் தடுமாறிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மட்டும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்து வீசினார்.

தேசிய நெடுஞ்சாலை போல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்ற பவுலர்கள் தடுமாறிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனி ஆளாக நின்று ஆஸ்திரேலியாவில் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினார். வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பத்து ஓவர் வீசி வெறும் 48 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இது போன்ற ஆட்டத்தில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் கூட இது போல் ஒரு வீரராவது 60 ரன்களுக்குள் விட்டுக் கொடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவின் இலக்கை கட்டுப்படுத்த முடியும். அந்த வேலையை வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செய்தார். ஒரு முனையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் ரன்களை கட்டுப்படுத்தியதால் மறுமுனையில் இருந்து வீரர்களால் நெருக்கடி ஏற்படுத்தி விக்கெட்டுகளையும் எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் இரண்டு விக்கெட் இழந்த நிலையில் 299 ரன்கள் எல்லாம் ஆறு விக்கட்டுகளை இழந்தது. இதற்கு வாஷிங்டன் சுந்தரனின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Wednesday, September 27, 2023, 18:13 [IST]
Other articles published on Sep 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+