2வது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆஸி. ஆல் அவுட்-இந்தியா அபார பந்து வீச்சு

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்குகிறது இந்தியா.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 428 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஷான் வாட்சன் சதமடித்தார்.
இதையடுத்து ஆடிய இந்திய தனது முதல் இன்னிங்ஸை 405 ரன்களுக்கு இழந்தது. ஷேவாக் 59, டெண்டுல்கர் 98, டிராவிட் 77, ரெய்னா 86 என விளாசினர். இருப்பினும் கடைசி நேரத்தில் இந்தியா விக்கெட்களைப் பறிகொடுத்ததால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை தாண்டி முடியாமல் சுருண்டது.
4வது நாளான இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் இஷாந்த் சர்மா தொடக்கத்திலேயே சடசடவென 3 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா நிதானமாக ஆடத் தொடங்கியது. ஆனாலும், ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றியதால் ஆஸ்திரேலியா பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.
அதிகபட்சமாக வாட்சன் 59 ரன்கள் எடுத்தார். காடிச் தன் பங்குக்கு 37 ரன்கள் எடுத்தார். பான்டிங் 4, கிளார்க் 4 என சுருண்டனர். மைக்கேல் ஹஸ்ஸி சற்று போராடி 28 ரன்களைச் சேர்த்துக் கொடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் 216 ரன்கள் எடுத்தால் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியும். நாளை ஒரு நாள் ஆட்டம் பாக்கி இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications