For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோவா ஒரு நாள் போட்டி மழையால் ரத்து-கஷ்டப்படாமல் தொடரை வென்றது இந்தியா

மர்கோவா (கோவா): இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை, இந்தியா அபாரமாக வென்றிருந்தது. இதையடுத்து ஒரு நாள் போட்டி தொடங்கியது. 3 போட்டிகளைக் கொண்ட தொடரில், கொச்சியில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

விசாகப்பட்டனத்தில் அக்டோபர் 20ம் தேதி நடந்த 2வது போட்டியில்இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 3வது போட்டி கோவாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. கடைசியில் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா.

Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+