மொஹாலி டெஸ்ட்-ஜாகிர்கானுடன் ரிக்கி பான்டிங் வாய்ச் சண்டை

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
கேப்டன் ரிக்கி பான்டிங் 71 ரன்கள் எடுத்த நிலையில், 42வது ஓவரின்போது ஹர்பஜன் சிங் வீசிய பந்தை அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க ஓடியபோது சுரேஷ் ரெய்னாவால் ரன் அவுட் செய்யப்பட்டார் பான்டிங்.
இதனால் விரக்தியுடன் வெளியேறிய பான்டிங், பந்து வீச்சாளர் ஜாகிர் கானைப் பார்த்து ஏதோ வாய் விட்டுச் சொன்னபடி வெளியேறினார். பதிலுக்கு ஜாகிரும் ஏதோ பதிலளிக்க அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் அது பெரிய சண்டையாக மாறவில்லை.
வாட்சன் அபார சதம்:
முன்னதாக ஆஸ்திரேலியா தனது பேட்டிங்கின்போது பெரிய ஸ்கோரை எட்டும் நோக்கில் சிறப்பாக ஆடியது. இருப்பினும், இந்தியா தக்க சமயத்தில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை மட்டுப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர் ஷான் வாட்சன் அபாரமாக ஆடி 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். பான்டிங் 71 ரன்கள் எடுத்தார். மைக்கேல் கிளர்க் 14 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
மைக்கேல் ஹஸ்ஸி 17 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியத் தரப்பி்ல ஜாகிர்கான் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஹர்பஜன் சிங்குக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications