Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பிக் பாஸை விடுங்க.. இந்த "பிக்பாஸ்" யார்? இன்று தெரியும்!

க்பூர்: நேற்று இரவு கண்முழித்து, டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். வெறொன்றும் இல்லை, இது கிரிக்கெட் பிக்பாஸ். கிரிக்கெட்டில் பிக்பாஸ் இந்தியாவா ஆஸ்திரேலியா என்பது இன்று நாக்பூரில் நடக்கும் போட்டியில் தெரியும்.

5 ஒருதினப் போட்டிகளில் விளையாட வந்துள்ள ஆஸ்திரேலியா அணியை, 3-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரையும் வென்றுள்ளது.

கிரிக்கெட் உலகின் மிகவும் வலுவான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியை, முதல் மூன்று போட்டிகளில் வென்று, தற்போது உலகின் மிகவும் வலுவான கிரிக்கெட் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஆரவ் - ஓவியா - ஆஸ்திரேலியா

ஆரவ் - ஓவியா - ஆஸ்திரேலியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வென்றாலும், ஓவியா புகழ் பெற்றதுபோல், ஆஸ்திரேலியா அணி உள்ளது. 4வது ஒருதினப் போட்டியில் வென்ற தெம்புடன், இன்று நாக்பூரில் நடக்கும் போட்டியில் களமிறங்க உள்ளது.

சைலன்ட்டாக.. வயலன்ட்டாக

சைலன்ட்டாக.. வயலன்ட்டாக

அதே நேரத்தில், வெளியில் மிகவும் சைலண்டாகவும், மைதானத்தில் வயலண்டாகவும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரவ் வென்றதுபோல், இந்தியா உள்ளது.

2 வெற்றி

2 வெற்றி

நாக்பூரில் இதுவரை நடந்துள்ள 7 ஒருதினப் போட்டிகளில், இந்தியா விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற அந்த கடைசி 2 வெற்றியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் குவிப்புக்கு வாய்ப்பு

ரன் குவிப்புக்கு வாய்ப்பு

முதலில் ஆடும் அணி, இங்கு சராசரியாக 304 ரன்கள் குவித்துள்ளது. அதனால், இன்று நடக்கும் ஆட்டத்தில் அதிக ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்,

உமேஷ் யாதவ் மீது ஃபோகஸ்

உமேஷ் யாதவ் மீது ஃபோகஸ்

இதுவரை 71 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள நாக்பூரைச் சேர்ந்த உமேஷ் யாதவ், முதல் முறையாக உள்ளூர் மைதானத்தில் சர்வதேசப் போட்டியில் விளையாட உள்ளார். அதனால், அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட் உலகின் பிக் பாஸ்

கிரிக்கெட் உலகின் பிக் பாஸ்

ஆஸ்திரேலியாவுக்கு முன், இலங்கைக்கு எதிரான தொடர்களில் அபார வென்ற இந்திய அணி, கிரிக்கெட் உலகின் பிக்பாஸ் என்பதை நிரூபிக்க இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Sunday, October 1, 2017, 10:54 [IST]
Other articles published on Oct 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+