Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. இல்லனா இப்படிலாம் விக்கெட் கிடைக்குமா.. முதல் தேர்வில் பாஸ்!

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 21 மாதங்களுக்குப் பிறகு 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் முதல் தேர்ச்சியில் பாசாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமானது என்பதால் அஸ்வின் இதில் எந்த மாதிரி செயல்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

India australia match - R Ashwin got big lucky breakthrough wicket with economical spell

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆடுகளம் கொஞ்சம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக செயல்பட்டது. குறிப்பாக வறண்ட நிலையில் ஆடுகளம் இருந்ததால் பேட்டிற்கு பந்து சரியாக வரவில்லை. மேலும் வேகப்பந்துவீச்சாளர்களான முகம்மது ஷமி, பும்ரா ஆகியோரும் தங்களது வேகத்தால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச வந்தவுடன் வார்னர் அவரது ஓவரை தாக்கி விளையாடினார். எனினும் அஸ்வின் தன்னுடைய அனுபவத்தால் ரன்கள் சென்றதை கட்டுப்படுத்தினார் .ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அவர்களின் ரன் அடிக்கும் வேகம் குறைந்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் 32 வது புள்ளி நான்காவது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க மார்னஸ் லாபஸ்சேன் முற்பட்டபோது பந்தை அவர் தவற விட்டார்.

எனினும் இந்த பந்தை விக்கெட் கீப்பராக இருந்த ராகுலும் தவறவிட பந்து ராகுலின் காலில் பட்டு மீண்டும் ஸ்டெம்பில் அடித்தது. அந்த தருணத்தில் லாபஸ்சேன் கிரீஸ் மேலே காலை வைத்து நின்று கொண்டிருந்தார். கிரிக்கெட் விதிப்படி கிரீசுக்கு உள்ளே கால் இருந்தால் மட்டுமே அது நாட் அவுட் என கருதப்படும்.

இதனை அடுத்து கே எல் ராகுல் மூன்றாம் நடுவரின் உதவியை கேட்க இது அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்தார். இது அஸ்வினுக்கு கிடைத்த முதல் விக்கெட் ஆகும். 10 ஓவர் வீசிய அஸ்வின் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்து இருந்தார். 21 மாதங்கள் பிறகு திரும்ப திரும்ப கிரிக்கெட் வீரருக்கு இது ஒரு நல்ல செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 22, 2023, 17:05 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+