For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படியே அல்வா மாதிரி வந்த வார்னர் விக்கெட்.. கோட்டை விட்ட வீரர்.. வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வார்னர் கொடுத்த அல்வா போன்ற கேட்சை தவறவிட்டது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் யார் பங்கேற்க போகிறார்கள் என்பதை தீர்மானிக்க கூடிய ஒரு தொடராக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய பேட்டிங் மற்றும் பில்டிங் போன்ற திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

India australia match - Shreyas iyer missed catch chance to dismiss david warner

இந்த நிலையில் வார்னர் போன்ற ஒரு வீரரின் கேட்சை ஸ்ரேயாஸ் தவறவிட்டது ரசிகர்களை கடுப்படைய செய்தது. மொஹாலி ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இயற்கையாகவே இருக்கும். இந்த நிலையில் முகமது சமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தனர். எனினும் எட்டு ஓவருக்கு பிறகு ஆஸ்திரேலியா வீரர் வார்னர் அதிரடியாக விளையாட முற்பட்டார்.

அப்போது சர்துல் தாக்கூர் ஓவரில் வார்னர் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். பொதுவாக ஷர்துல் தாக்கூர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரராக திகழ்கிறார். இந்த நிலையில் ஆட்டத்தின் 8 புள்ளி 6வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை வார்னர் அடிக்கும் போது மிட் ஆஃப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த கேட்சை பிடிக்க முயன்ற போது அதனைத் தவறி கீழே விட்டு விட்டார்.

India australia match - Shreyas iyer missed catch chance to dismiss david warner

அப்போது வார்னர் வெறும் 14 ரன்கள் என்ற நிலையில் தான் இருந்தார். இந்த கேட்சை அவர் தவறவிட்டதால் வார்னர் அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 52 நூல்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். வார்னர் மட்டும் 14 ரன்களில் ஆட்டம் இழந்திருந்தால். ஆஸ்திரேலியா இந்நேரம் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கும்.

இதுபோன்ற எளிய கேட்சுகளை தவறவிடுவது இந்திய அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இதனால் ஸ்ரேயாஸ் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் இது போன்ற வாய்ப்பை எல்லாம் தவறவிட்டால் அது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Story first published: Friday, September 22, 2023, 15:52 [IST]
Other articles published on Sep 22, 2023
English summary
India australia match - Shreyas iyer missed catch chance to dismiss david warner அப்படியே அல்வா மாதிரி வந்த வார்னர் விக்கெட்.. கோட்டை விட்ட வீரர்.. வீட்டுக்கு கிளம்ப வேண்டியதான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+