புனேயில் ஒருநாள் போட்டி: இந்தியா- ஆஸி. மோதல்!
புனே: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் முதலாவது போட்டி நாளை புனேயில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 7 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் புனேயில் நாளை நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரில் சாதிக்குமா?
20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடியது போல் ஒருநாள் தொடரிலும் இந்தியா சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

யுவி சாதிப்பாரா?
அணிக்கு மீண்டும் திரும்பிய யுவராஜ்சிங் 20 ஓவர் ஆட்டத்தில் முத்திரை பதித்தார். ஒருநாள் தொடரிலும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ஆட்டக்காரர்கள்
இது தவிர கோஹ்லி, ரெய்னா, ஷிகார்தவான், கேப்டன் டோனி, ரோகத்சர்மா போன்ற சிறந்த போட்ஸ்மேன்களாக அணியில் உள்ளனர்.

பதிலடி கொடுக்குமோ?
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச், மேடின்சன், வாட்சன், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

விறுவிறுப்பு..
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications