இந்தியா- ஆஸி. ஒருநாள் போட்டி: ஒரே நாளில் டிக்கெட்டுகள் காலி
பெங்களூர்:
பெங்களூரில் நடக்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்றே விற்பனையாகி விட்டதால் ஆவலுடன் டிக்கெட் வாங்க வந்த கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்றது.
முதல் ஒரு நாள் போட்டி வருகிற 29ம் தேதி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த போட்டிக்கு ஆன்-லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் அறிவித்திருந்தார்.
நேற்று காலை டிக்கெட் வாங்குவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் முதல் நாள் இரவிலேயே வந்து டிக்கெட் கவுண்டரின் முன்பு படுத்துவிட்டார்களாம். காலை 7 மணிக்கு துவங்கிய டிக்கெட் விற்பனை மதியம் 2-30 மணிக்கு முடிந்து விட்டது. காரணம் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாம்.
ஆனாலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதை காதில் வாங்காமல் நின்று கொண்டேயிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் அவர்களை ஹோக்ரி, ஹோக்ரி (போங்க, போங்க) என்று கூறி அடித்து விரட்டினர்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் போலீசாரை எதிர்த்து கூச்சலிட்டனர். ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ததால் தான் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications