Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

Recommended Video

India - Australia T20, Test, ODI series 2020 schedule

அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு, மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த தொடருக்கு இடையே ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி ஒன்றும் நடக்க உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் வரிசையாக ரத்து செய்யப்பட்டு வந்தன. அதனால் பல அணிகளுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த முயற்சி எடுத்தன. ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆட ஆர்வமாக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆட இந்தியா முன்பே திட்டமிட்டு இருந்தது.

இந்தியா சம்மதம்

இந்தியா சம்மதம்

கொரோனா வைரஸ்-க்கு இடையே நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்ல இந்தியா சம்மதம் கூறியதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள கிரிக்கெட் அட்டவணையில் இந்தியா தொடரும் இடம் பெற்றுள்ளது.

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

அந்த அட்டவணையின்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் தொடங்கி ஜனவரி வரையும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரியிலும் நடைபெற உள்ளது.

டி20 தொடர் அட்டவணை

டி20 தொடர் அட்டவணை

இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள டி20 தொடர் அட்டவணை -

முதல் டி20 போட்டி - அக்டோபர் 11 - பிரிஸ்பேன்

இரண்டாவது டி20 போட்டி - அக்டோபர் 14 - கேன்பர்ரா

மூன்றாவது டி20 போட்டி - அக்டோபர் 17 - அடிலெய்டு

இடையே ஆப்கானிஸ்தான் டெஸ்ட்

இடையே ஆப்கானிஸ்தான் டெஸ்ட்

டி20 தொடர் முடிந்த உடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஆனால், அதற்கு இடையே ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. அந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த்தில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடர் அட்டவணை

டெஸ்ட் தொடர் அட்டவணை

டி20 தொடர் முடிந்த உடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஆனால், அதற்கு இடையே ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. அந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த்தில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடர் அட்டவணை

டெஸ்ட் தொடர் அட்டவணை

இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள டெஸ்ட் தொடர் அட்டவணை -

முதல் டெஸ்ட் - டிசம்பர் 3 முதல் 7 வரை - பிரிஸ்பேன்

இரண்டாவது டெஸ்ட் (பகல் இரவு டெஸ்ட்) - டிசம்பர் 11 முதல் 15 வரை - அடிலெய்டு

மூன்றாவது டெஸ்ட் - டிசம்பர் 26 முதல் 30 வரை - மெல்போர்ன்

நான்காவது டெஸ்ட் - ஜனவரி 3 முதல் 7 வரை - மெல்போர்ன்

ஒருநாள் தொடர் அட்டவணை

ஒருநாள் தொடர் அட்டவணை

இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள ஒருநாள் போட்டித் தொடர் அட்டவணை -

முதல் ஒருநாள் போட்டி - ஜனவரி 12 - பெர்த்

இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 15 - மெல்போர்ன்

மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜனவரி 17 - சிட்னி

மாற்றம் இருக்கும்

மாற்றம் இருக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே இந்த தொடர்கள் நடக்க உள்ளதால் அட்டவணையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது. டி20 தொடருக்கும், டெஸ்ட் தொடருக்கும் ஒன்றரை மாத இடைவெளி உள்ள நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரை நவம்பர் மாதத்துக்கு மாற்றி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, May 28, 2020, 20:03 [IST]
Other articles published on May 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+