Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா தப்பு பண்ணுவீங்க? ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்.. தட்டி தூக்கிய குல்தீப் யாதவ்

சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீசி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் தேர்வு செய்தது.

சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால் பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். மற்ற உலக கோப்பை போட்டியில் 350 ரன்கள் எளிதாக அடிக்கப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்படி ஒரு சூழல் இருக்காது என தெரிகிறது.

India australia worldcup match - David warner got out terribly in kuldeep yadav bowling

ஆட்டத்தின் 2.2 வது ஓவரிலே பும்ரா பந்துவீச்சில் மிச்சல் மார்ஸ் விராட் கோலி அபார கேட்ச் ஆல் பிடிபட்டார். இதனை அடுத்து டேவிட் வார்னரும் ஸ்மித்தும் இணைந்து விளையாடி வருகின்றனர். இதில் முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் தான் எடுத்திருந்தது. அதன் பிறகு டேவிட் வார்னர் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா அஸ்வின் சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சில் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடினார்.

ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய இலக்கை எடுக்க வேண்டும் என்றால் அது டேவிட் வார்னரின் கையில் தான் இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்த அவர் தன்னுடைய அனுபவ வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு வேகம் அதிகமானது. இதனால் டேவிட் வார்னர் அரை சதத்தை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் டேவிட் வார்னருக்கு பதிலடி கொடுத்தார். டேவிட் வார்னர், குல்தீப் யாதவ் பந்துவீச்சை அடிக்க ஆசைப்பட்டு பந்தை சரியாக கணிக்காமல் அடித்துவிட்டார்.

India australia worldcup match - David warner got out terribly in kuldeep yadav bowling

இதனால் அந்த பந்து நேரடியாக குல்தீப் யாதவிடமே பிடிபட்டது. இதன் மூலம் டேவிட் வார்னர் 41 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 74 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மட்டும் டேவிட் வார்னர் நின்றிருந்தால் நிச்சயம் சதம் அடித்திருப்பார். ஆனால் குல்தீப் யாதவ் தன்னுடைய திறமையான பந்துவீச்சால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

Story first published: Sunday, October 8, 2023, 15:58 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+