இது லிஸ்ட்லயே இல்லயே.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. 3 வீரர்களை நீக்கிய ரோகித்
அமெரிக்கா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மழையால் தாமதமாக தொடங்கியுள்ளது
Recommended Video
இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும்.
இந்த நிலையில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பூரான் பந்துவீசுவதாக அறிவித்தார். மழை மீண்டும் குறுக்கிட்டால் டக் வொர்த் லூயில் விதி அமலுக்கு வரும்.

ஏன் பந்துவீச்சு
அப்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகம் என்பதால், அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் ரன் குவிப்பில் ஈடுபட்டால், அது நல்ல பலனை தரும். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அணியில் 3 மாற்றத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

ஸ்ரேயாஸ் நீக்கம்
இந்திய அணியில் கடந்த சில டி20 போட்டிகளில் ரன் குவிக்காமல் தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நமது தளத்தில் சொன்னது போல சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று யாரும் எதிர்பாராத வகையில் ஹர்திக் பாண்டியா அணியிலிருந்த நீக்கப்பட்டுள்ளார்.

பாண்டியா நீக்கம்
தமக்கு கேப்டன் 4 ஓவர்களை தர வேண்டும் என்று பாண்டியா கூறிய நிலையில், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலுக்கு ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்துள்ளார். இதே போன்று அனுபவ வீரர் அஸ்வினும், 4வது போட்டியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஸ்னாய்க்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கியுள்ளார்.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், 3, சஞ்சு சாம்சன், 4, தீபக் ஹூடா, 5, தினேஷ் கார்த்திக், 6, ரிஷப் பண்ட், 7, அக்சர் பட்டேல், 8, புவனேஸ்வர் குமார், 9, ரவி பிஸ்னாய். 10, ஆர்ஸ்தீப் சிங், 11, ஆவேஷ் கான்


Click it and Unblock the Notifications