Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இந்தியா!!

துபாய்: 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் முடிந்ததும் அணிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இது தவிர புதிய சீசனில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற ஒட்டுமொத்த ஆட்டங்களின் அடிப்படையில் அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும்.

இதன்படி இந்த ஆண்டுக்கான தர வரிசைப்பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

ஒரே ஒரு தோல்விதான் இந்தியாவுக்கு!

ஒரே ஒரு தோல்விதான் இந்தியாவுக்கு!

கடந்த 12 மாதங்களில் இந்திய அணி ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

உலக சாம்பியனுக்கு 2வது இடம்

உலக சாம்பியனுக்கு 2வது இடம்

20 ஓவர் உலக சாம்பியன் இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 3வது இடம்

பாகிஸ்தானுக்கு 3வது இடம்

பாகிஸ்தான் அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. 4வது இடத்தில் தென்னாப்ரிக்க அணியும், 5வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.

முதல் 5 இடங்கள்

முதல் 5 இடங்கள்

1. இந்தியா - 131 புள்ளிகள்

2. இலங்கை - 130 புள்ளிகள்

3. பாகிஸ்தான் - 123 புள்ளிகள்

4. தென் ஆப்பிரிக்கா - 121 புள்ளிகள்

5. ஆஸ்திரேலியா - 112 புள்ளிகள்

இங்கிலாந்துக்கு 8வது இடம்

இங்கிலாந்துக்கு 8வது இடம்

6. நியூசிலாந்து - 110 புள்ளிகள்

7. மேற்கிந்திய தீவுகள் - 110 புள்ளிகள்

8. இங்கிலாந்து - 97 புள்ளிகள்

9. அயர்லாந்து - 87 புள்ளிகள்

10. வங்கதேசம் - 72 புள்ளிகள்

ஜிம்பாப்வேவுக்கு 13வது இடம்

11வது இடத்தில் நெதர்லாந்து, 12வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இதற்கு பின்னர் 13வது இடத்தில்தான் ஜிம்பாப்வே இருக்கிறது. ஸ்காட்லாந்து அணி 14வது இடத்தில் இருக்கிறது.

Story first published: Friday, May 2, 2014, 12:07 [IST]
Other articles published on May 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+