For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னையா வெளியில் உட்கார வச்சீங்க.. வந்த உடனே வேலையை காட்டிய ஷமி.. தெறிச்சி போன ஸ்டம்ப் - வீடியோ

கொழும்பு : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்றால் அது முகமது சமி தான்.

இந்த நிலையில் இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராக இருந்த முகமது சமிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வழங்கிய பிசிசிஐ தற்போது அவரை அணியில் தேர்வு செய்தாலும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

India Bangladesh match - Terrific Bowling from Mohammed shami clean bowled liton das

முகமது சிராஜ், தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியர்களில் உச்சபட்ச இடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் சமி தமக்கு இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் ஃபோர் லீக் சுற்று ஆட்டத்தில் முகமது சமிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை கெட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த சமி சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தன்னுடைய வெறித்தனமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். வங்கதேச அணியின் நட்சத்திர வீரரான லிட்டன் தாசை இரண்டாவது பந்திலே சமி ஆட்டம் இழக்க வைத்தார். பந்து எப்படி உள்ளே வந்து ஸ்டெம்பை தாக்கியது என்று கொஞ்சம் கூட கணிக்க முடியாத படி அதிவேகமாக வீசி கிளீன் போல்ட் செய்தார்.

தற்போது 25 ஓவர் முடிவடைகையில் சமி மட்டும் ஐந்து ஓவர்களை வீசி 12 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதில் ஒரு விக்கெட் அடங்கும். ஷமி ஓவரில் தற்போது வரை இரண்டு பவுண்டரிகள் தான் சென்றிருக்கிறது. இதனால் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக சமி தற்போது வரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் , முகமது சமியை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். பும்ரா சமி ,சிராஜ் ஆகிய மூன்று வீரர்களும் இணைந்தால் நிச்சயம் அது எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் தற்போது சமி சிறப்பாக செயல்பட்டதால் பைனலில் யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பம் இந்திய அணியில் ஏற்படும்.

Story first published: Friday, September 15, 2023, 17:40 [IST]
Other articles published on Sep 15, 2023
English summary
India Bangladesh match - Terrific Bowling from Mohammed shami clean bowled liton das என்னையா வெளியில் உட்கார வச்சீங்க.. வந்த உடனே வேலையை காட்டிய ஷமி.. தெறிச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+