Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - ஐயயோ.. மீண்டும் முதலில் இருந்தா.. வேணாம் தலைவரே? இந்திய அணியில் 5 பேருக்கு இன்று ஓய்வு

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்று விட்டதால் இன்றைய ஆட்டம் சமிபிரதாய ஆட்டமாக தான் கருதப்படுகிறது.

இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு இன்னும் சில நாட்களில் உள்ளது. இந்த நிலையில் இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு பிளேயிங் லெவனின் வாய்ப்பு கொடுக்க ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிடும் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ind vs ban

இதன் மூலம் இந்திய அணியின் Bench strenght- ஐ சோதனை படுத்தி பார்க்க நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று போட்டி விளையாடியதால் வீரர்கள் உடல் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் தரும் வகையில் இன்றைய ஆட்டத்தில் ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பெஞ்சில் அமர்த்தி வைக்கப்பட்ட மூன்று வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. அதன்படி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக முகமது சமி, பிரசித் கிருஷ்ணா ,ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் விளையாட இருக்கின்றனர்.

இதே போன்று பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவுக்கும் இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக யார் வெளியே போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு கிடைக்கலாம் என தெரிகிறது. இதேபோல் கே எல் ராகுல் அல்லது இஷான் கிஷன் ஆகியோர் வெளியே அமர்த்தி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி சோதனை முயற்சியில் ஈடுபட இருக்கிறது. எனினும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடைசி கட்டத்தில் அணியை மாற்ற வேண்டாம் என்று சில ரசிகர்களும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Story first published: Friday, September 15, 2023, 0:36 [IST]
Other articles published on Sep 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+