Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன வச்சு காமெடி பண்ணாதீங்க.." நிருபர்களிடம் சூர்யகுமார் யாதவ் கிண்டல்.. என்னாச்சு?

அகமதபாத்: மேற்கிந்திய திவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், இந்திய கிரிக்கெட் விரர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்திய அணியில் தமது இடம், பேட்டிங் வரிசை, தனது கனவு குறித்து பல்வேறு கருத்துகளை கூறினார்.

மேற்கிந்திய திவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங். ஃபில்டிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

சிறப்பாக விளையாடுவேன்

சிறப்பாக விளையாடுவேன்

இந்திய அணியில் தற்போது 5வது அல்லது 6வது வீரராக களமிறங்க வாய்ப்பு தரப்படுகிறது. எனக்கு எந்த வரிசை இடம் கிடைத்தாலும் சிறப்பாக விளையாடுவேன். தற்போது அணியின் தேவைக்காக சுழற்பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். வலைப் பயிற்சியில் ஏற்கனவே பந்துவீச தொடங்கி விட்டேன்.

டெஸ்ட் ஆடனும்

டெஸ்ட் ஆடனும்

போட்டியின் போது எனக்கு வாய்ப்பு தரப்பட்டால், பந்துவீச்சு திறமையை காட்டுவேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என் கனவு, ஆசை. சிவப்பு பந்து கிரிக்கெட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.

காமெடி பண்ணாதீங்க

காமெடி பண்ணாதீங்க

அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களை ரசிகர்கள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனுடன் ஓப்பிட்டு கூறுகிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.. இதனை கேட்டு சிரித்த சூர்யகுமார் யாதவ், என்ன வச்சு காமெடி பண்ணாதீங்க, நான் இப்போது தான் இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

Recommended Video

Surprise picks in India’s ODI and T20I squads for WI Series | OneIndia Tamil
பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு பேட்டிங் வரிசையில் 4வது இடம் தர வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடக் கூடியவர். இதனால் அவருக்கு பேட்டிங் வரிசையில் 6வது இடத்தை வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று சூர்யகுமார் சுழற்பந்துவீச்சு கற்று வருவதாக கூறுவதும் இந்தியாவுக்கு நன்மை தரும்.

Story first published: Tuesday, February 8, 2022, 23:52 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+