Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரட்டலான டி20 பேட்டிங் வரிசையை கவனிச்சீங்களா? சீனியர்கள் இல்லாமல் நல்லா இருக்கே? சூப்பர் திட்டம்

மும்பை : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி முற்றிலும் புதிய வீரர்களை வைத்து களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

எப்படி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தோனி தலைமையில் இந்தியா முற்றிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததோ அதேபோன்று ஒரு நிலையை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

சீனியர்கள் இல்லை

சீனியர்கள் இல்லை

அதன் முதல் படியாக தான் இலங்கைத் தொடரில் இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது. சீனியர்கள் இல்லை என்றால் இந்திய அணி எப்படி இருக்கும் என ரசிகர்கள் கவலையில் இருக்கலாம். ஆனால் இந்திய அணியின் பலம் மேலும் அதிகரித்து தான் இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுல் ரோகித் சர்மா ஆகியோர் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதிய ஜோடி

புதிய ஜோடி

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மைனஸ் பாயிண்டாக இருந்தது தொடக்க வீரர்கள் தான். இதனால் அவர்கள் நீக்கப்பட்டு இஷான் கிஷன், சுப்மான் கில், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய மூன்று பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ருத்துராஜ் விளையாட அதிக வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக இஷான் கிஷன், சுப்மான் கில் என வலது, கை இடது கை பேட்ஸ்மேன்கள் ஜோடியாக களம் இறங்கலாம்.

பலமான பேட்டிங்

பலமான பேட்டிங்

இதன் அடுத்தபடியாக நடு வரிசையில் மிரட்டலான பேட்டிங் வரிசையை இந்தியா உருவாக்கியிருக்கிறது. மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவ், நான்காவது வீரராக சஞ்சு சாம்சன், ஐந்தாவது வீரராக தீபக் ஹூடா, ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவின் நடுவரசை பலமாக காட்சியளிக்கிறது. ஏழாவது வீரராக அக்சர் பட்டேல் ,எட்டாவது வீரராக வாஷிங்டன் சுந்தர், ஒன்பதாவது வீரராக குல்தீப் யாதவ் அல்லது சாகல் என பந்துவீச்சிலும் இந்திய அணி வெரைட்டியாக இருக்கிறது.

புதிய பந்துவீச்சு படை

புதிய பந்துவீச்சு படை

இதுபோன்று வேகப்பந்துவீச்சாளராக ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அணியின் நட்சத்திர வீரரான புவனேஸ்வர் குமார் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை போன்று இளம் வீரரான ரவி பிஸ்னாய் அணியில் சேர்க்கப்படாதது கவனிக்கத்தக்கது. இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்கள் சிவம் மவி, முகேஷ் குமார் ஆகியோருக்கும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Story first published: Wednesday, December 28, 2022, 13:23 [IST]
Other articles published on Dec 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+