Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி இல்ல... ஷமி, இஷாந்த், ரோகித்கூட இல்ல... ஆனாலும் சிறப்பான அதிரடி வெற்றி!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நடைபெற்று முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவை சிறப்பாக வெற்றி கொண்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்டவர்கள் இல்லாமல் இந்த போட்டியில் வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி.

மேலும் இந்த போட்டியின்மூலம் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய வீரர்கள் இல்லாத போட்டி

முக்கிய வீரர்கள் இல்லாத போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் கடந்த 2018 -19க்கு பிறகு சிறப்பான வகையில் இந்தியா அபார வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் முக்கியமாக கேப்டன் விராட் கோலி, பௌலர்கள் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் ரோகித் சர்மாவும் இடம்பெறவில்லை.

டாஸில் தோல்வி

டாஸில் தோல்வி

இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை. உமேஷ் யாதவும் காயம் காரணமாக போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. மாறாக இந்த போட்டியின்மூலம் தங்களது சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். மேலும் டாசிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

கடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான இடத்தில் உள்ள கேப்டன் விராட் கோலி இருந்தார். மேலும் டாசிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆயினும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஏறக்குறைய முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்த போட்டியை வழிநடத்திய ரஹானே சிறப்பான கேப்டன்ஷிப்பின் மூலம் வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார். சதத்தையும் அடித்தார்.

சாதித்து காட்டிய ரஹானே

சாதித்து காட்டிய ரஹானே

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துயதை கடந்த 2018 -19 தொடரில் சாதித்து காட்டினார் கோலி. அந்த வரலாற்றை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அனுபவம் மிக்க அஜிங்க்யா ரஹானே தற்போது சாதித்துள்ளார். அனுபவமிக்க வீரர்கள் இல்லாவிட்டாலும் இந்தியா எதையும் சிறப்பாக செய்யும் என்ற நம்பிக்கை இதன்மூலம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 29, 2020, 13:34 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+