Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டி-20” ஆசிய கோப்பை போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி- 6வது முறையாக சாதனை

மிர்புர்: வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை "ட்வெண்டி-20" இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை "டி-20" தொடர் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. இந்நிலையில் போட்டி நடந்த மிர்புரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை நின்ற பின் அம்பயர்கள் மைதானத்தை பரிசோதித்தனர். தலா 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பவுலிங் தேர்வு செய்தார்

India beat Bangladesh by 8 wickets to win 6th title

இப்போட்டியில் தவான், கோஹ்லி ஜோடி சிறப்பாக செயல்பட்டது. தவான் அரை சதம் கடந்தார். அல் அமின் வீசிய 14 ஆவது ஓவரில் கேப்டன் டோணி 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து மிரட்டினார்.

இந்திய அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி, கேப்டன் டோணி ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 7, 2016, 7:44 [IST]
Other articles published on Mar 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+