Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.. 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தல்

சட்டோகிராம் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில 404 ரன்கள் குவித்தது. புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சால் 150 ரன்களில் சுருண்டது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஃபாலோ ஆன் தராமல் அதிரடியாக விளையாடியது. புஜாரா 130 பந்துகளில் சதம் விளாசினார். தொடக்க வீரர் சுப்மான் கில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்து டிக்ளேர் செய்தது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ஜாகிர் சதம் விளாசினார். மற்றொரு வீரரான நஜிமுல் 67 ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழந்த நிலையில், வங்கதேச அணி மீண்டும் சரிவை கண்டது.யாசர் அலி 5 ரன்களிலும், லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஷகிபுல் ஹசன் போராட்டம்

ஷகிபுல் ஹசன் போராட்டம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்பிகுர் ரஹிமும் 23 ரன்களில் வெளியேறினார். 272 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோருடன் 5வது நாள் ஆட்டத்தை வங்கதேசம் தொடர்ந்தது. மெஹதி ஹசன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷகிபுல் ஹசன் 84 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதனையடுத்து வங்கதேச அணி 324 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி இன்னும் 4 வெற்றிகள் தேவைப்படுகிறது.

Story first published: Sunday, December 18, 2022, 11:10 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+