Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச வரலாற்றில் மிகப் பெரிய தோல்வி.. 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி !

சிட்டங்காங் : வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2க்கு0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி கடைசி போட்டியில் பழித் தீர்த்து கொண்டது.

முதல் 2 போட்டியில் இந்திய அணி, அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடமல், வங்கதேசம் கொடுக்கும் நெருக்கடிக்கு அடிப்பணிந்தது.

கேட்ச் மிஸ்

கேட்ச் மிஸ்

ஆனால், கடைசி ஆட்டத்தில் இந்திய அணி பதிலுக்கு திருப்பி அடித்த உடன், வங்கதேச அணி முற்றிலும் நிலைக்குலைந்து போனது. வங்கதேசம் தொடரை வென்றும், நீங்கள் வென்று அதிர்ஷ்டசத்தால் தான் என்பது போல், இன்றைய ஆட்டம் அமைந்துவிட்டது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. ஷிகர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 4 ரன்களில் இருக்கும் போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.

210 ரன்கள்

210 ரன்கள்

இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். 85 பந்துகளை சதத்தை பூர்த்த செய்த அவர், அடுத்த 18 பந்தில் மேலும் 50 ரன்களை கடந்தார். அதன் பிறகும் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டிய இஷான் கிஷன் 126 பந்துகளில் அதவேக இரட்டை சதம் விளாசினார். முதல் சதத்தை 85 பந்திலும், இரண்டாவது சதத்தை 41 பந்தில் இஷான் கிஷன் குவிக்க, 15 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி சதம்

விராட் கோலி சதம்

மறுபுறம் முதலில் அமைதி காத்த விராட் கோலி, 85 பந்துகளில் தனது 44வது சர்வதேச ஒருநாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் முலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் அடித்து ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார். கோலி 113 ரன்களில் வெளியேற, அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தடுமாறிய வங்கதேசம்

தடுமாறிய வங்கதேசம்

வாசிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 409 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. 410 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி அதிரடியாக ஆட முற்பட்டு கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. அனாமுல் ஹக் 8 ரன்களிலும், லிட்டன் தாஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆரம்பமே அந்த அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.

 இமாலய வெற்றி

இமாலய வெற்றி

முஷ்பிகுர் ரஹிம் 7 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாசர் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய ஷகிபுல் ஹசன் 43 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகெடுத்தார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட மகமுதுல்லா 20 ரன்களிலும், மெஹதி ஹசன் 3 ரன்களிலும் வெளியேற, அந்த அணி 34 ஓவர் முடிவில் 182 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசத்தின் வரலாற்றில் இது மிகப் பெரிய தோல்வி ஆகும்.

Story first published: Saturday, December 10, 2022, 19:05 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+