Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா செம்ம செம்ம.. ஜஸ்ட் 17 பந்துகளில் முடிந்து போன 5வது நாள் ஆட்டம்!

ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது.

India beat england by 203 runs

இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களும்,இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களையும் (டிக்ளேர்) எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்து இருந்தது.

கடைசி ஒரு விக்கெட்டுக்காக கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 17 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது கடைசி விக்கெட்டை இழந்தது. அஸ்வின் இந்த போட்டியில் தனது முதல் விக்கெட்க்காக இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற நிலையில் பின் தங்கியுள்ளது. ஒரு வேளை இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் இந்தியா தொடரை இழந்திருக்கும். நல்லவேளையாக அதைத் தடுத்து விட்டது இந்தியா.

Story first published: Wednesday, August 22, 2018, 18:11 [IST]
Other articles published on Aug 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+