Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை மிரட்டிய ஹாங்காங்.. ஆசிய கோப்பை ஆசையை மூட்டை கட்டி வைங்க மக்களே

Recommended Video

ஆசிய கோப்பையில் இந்தியா “பரிதாப வெற்றி”.ஹாங்காங்கை வீழ்த்த போராடியது

துபாய்: ஆசிய கோப்பை போட்டி தொடரின் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்த இந்திய அணி போராடி வெற்றி அடைந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்போட்டியின் ஹைலைட்ஸ் இதோ

1) ஏமாற்றிய ரோஹித் சர்மா மற்றும் தோனி

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் தொடரில் களமிறங்கிய ரோஹித் சர்மா,பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றியது. இந்திய ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி ,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி வெளியேறியது தான். இங்கிலாந்து தொடரில் சரிவர பேட்டிங் செய்யாத தோனி, இந்த தொடரில் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கத்துக்குட்டி அணிக்கெதிராக அவர் 3 பந்துகளில் டக் அவுட் ஆனது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

india beat hongkong after huge struggle highlights

2) நம்பிக்கை தந்த தவான் மற்றும் ராயுடு

இந்த போட்டியில் இந்திய அணி வீரர் தவான் தனது 14ஆவது சதத்தை அடித்தார். இங்கிலாந்து தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் தடுமாறிய அவர் தற்போது சதம் அடித்திருப்பது இந்திய அணிக்கு பெரிய ஆறுதல். மற்றொரு இந்திய வீரர் ராயுடு சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடியிருப்பது பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும்.

3) நம்பிக்கை தந்த அறிமுகம் கலீல் அஹமத்

இந்திய அணியின் அறிமுக வீரர் கலீல் அஹமத் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியவரும் இவரே ஆவார். இவர் 10 ஓவர்களில் 48 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் விக்கெட் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4) ஹாங்காங்கின் அதிரடி தொடக்கம்

ஹாங்காங் அணி யாரும் எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முதலாவது விக்கெட்டிற்கு 174 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் அன்ஹுமான் ராத் 73 ரன்களையும்,நிசாகாட் கான் 92 ரன்களையும் குவித்து அசத்தினர்.

india beat hongkong after huge struggle highlights


5) ஹாங்காங்கின் மறக்கமுடியாத போட்டி

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும் ஹாங்காங் அணி போராடிய விதம் கண்டிப்பாக பாராட்டுக்குரியது. உலகின் சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணி,ஒருநாள் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்துள்ள இந்திய அணியை,சமீபத்தில் ஒருநாள் அந்தஸ்தை இழந்த ஹாங்காங் அணி எதிர்த்து போராடி கடைசி நேரத்தில் அனுபவமின்மையால் தோல்வியை தழுவியது. அதுவும் வெறும் 26 ரன்கள் வித்தியாசத்தில். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியால் 300 ரன்களை கூட எடுக்கமுடியவில்லை. ஹாங்காங் அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சு கட்டுக்கோப்பான முறையில் இருந்ததே இதற்கு காரணமாகும். மொத்தத்தில் இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டி ,கடைசியில் தோல்வியை தழுவியது ஹாங்காங் அணி.





Story first published: Wednesday, September 19, 2018, 10:36 [IST]
Other articles published on Sep 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+