ஜூனியர் உலக கோப்பை: அவேஷ் கான் ஆவேச பந்து வீச்சு.. நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
டாக்கா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் டியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதலில், அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், இன்று, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாசில் நியூசிலாந்து வென்று, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த இந்தியா, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

சபராஸ்கான் அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்தார். இரண்டாவதாக பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.1 ஓவர்களில், 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இதனால், இந்தியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்கத்திலேயே வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான். இருப்பினும், மற்றொரு பவுலரான லோர்மோர் அதிகபட்சமாகக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த போட்டியில் இந்தியா, நேபாளத்தை சந்திக்க உள்ளது.


Click it and Unblock the Notifications