சின்ன பசங்களை வைத்து சாதித்த இந்தியா.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது.. யாருமே செய்யல
டெல்லி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரையும் 2க்கு1 என்ற கணக்கில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவ செய்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடந்தது.
டெல்லியில் மழை பெய்ததால், ஆட்டம் அரைமணி நேரம் வரை தாமதமாக தொடங்கியது. டாஸ் பெரும் முக்கியத்துவம் பெரும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அபார பந்துவீச்சு
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் குயின்டன் டி காக் 6 ரன்களில் வாசிங்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜென்னிமான் மாலன் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

99 ரன்கள் ஆல்அவுட்
மார்க்கரம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.கேப்டனாக களமிறங்கிய டேவிட் மில்லர் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கிளாசன் மட்டும் போராடி 34 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து குல்தீப் யாதவ் தனது ஓவரை வீச தொடங்கினார். அவருடைய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தவான் ரன் அவுட்
4.1 ஓவர் மட்டுமே வீசிய அவர் 18 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1வது ஓவரில் 99 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இஷான் கிஷன் 10 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

தொடரை வென்ற இந்தியா
கடந்த 2 ஒருநாள் போட்டியில் சொதப்பிய சுப்மான் கில், இன்று பொறுப்புடன் விளையாடி 8 பவுண்டரிகளை குவித்து 49 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றிக்கு 1 ரன் இருந்த நிலையில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.1வது ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications