Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிடம் முழுமையாக சரணடைந்தது இலங்கை... முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்

கட்டாக்: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான், ரகானே சதம் அடித்த சதங்களின் உதவியால் இந்திய அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நேற்று, பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா முதலில் பேட்டிங்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், களத்தடுப்பை தேர்வு செய்தார். முதலில் மட்டை வீச வந்த இந்திய அணிக்கு ஷிகர் தவான், அஜின்கியா ரகானே இணை நல்ல துவக்கம் கொடுத்தது.

அடித்தளம் அபாரம்

அடித்தளம் அபாரம்

இலங்கை பந்துவீச்சை நாலா புறமும் விளாசித் தள்ளிய இவர்கள் இருவரும் நூறு ஓட்டங்களை கடந்தனர். ரகானே 111 ஓட்டங்களிலும், தவான் 113 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 34 பந்தில் 52 ஓட்டக்களை குவித்து ஆட்டமிழந்தார்.

363 ரன்கள் குவிப்பு

363 ரன்கள் குவிப்பு

அணி நாயகன், விராட் கோஹ்லி (22) அம்பதி ராயுடு (27) ஓட்டங்களை எடுத்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 300 பந்துகளின் முடிவில், 5 ஆட்டக்காரர்களை இழந்து 363 ஓட்டங்களை குவித்தது. அக்சர் படேல் (14), விரிதிமன் சகா (10) ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். இலங்கை சார்பில் சுராஜ் ரந்திவ் 3 மட்டை வீச்சாளர்களை வீழ்த்தினார்.

இலங்கை தடுமாற்றம்

இலங்கை தடுமாற்றம்

இதன்பிறகு உபுல் தரங்கா, தில்ஷன் இணை இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தில்ஷன் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இஷாந்த் ஷர்மா வீசிய சிறப்பான ஒருபந்தில் சங்ககரா (13 ஓட்டங்கள்) வெளியேறினார். வருண் ஆரோன், உமேஷ் யாதவ், இஷாந்த் ஆகியோரின் வேகத்தில் இலங்கை நிலை தடுமாறியது.

200 ரன்களை கூட எட்டவில்லை

200 ரன்களை கூட எட்டவில்லை

அடுத்தாற்போல தரங்கா 28 ஓட்டங்களிலும், பிரசன்னா (5), ஜெயவர்தனா (43) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அணி தலைவர் மாத்யூஸ் (23), பிரியன்ஜன் (12) எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. முடிவில், இலஙகை அணி 236 பந்துகளை சந்தித்து, 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் 4 பேரை ஆட்டமிழக்கச் செய்தார்.

Story first published: Monday, November 3, 2014, 11:34 [IST]
Other articles published on Nov 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+