
டீசண்ட் ஸ்கோர்
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பிறகும், மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 262 ரன்களை எட்டியது. அந்த அணி 200 ரன்களையே கடக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரேமதாஸா ஸ்டேடியத்தின் ஸ்பின் டிராக்குக்கு ஏற்ப நல்ல ஸ்கோரை எட்டியது இலங்கை.

தவான் நிதானம்
இதையடுத்து, இந்திய அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ப்ரித்வி பட்டாசாய் வெடித்தார். ப்ரித்வி 24 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில், 9 பவுண்டரிகள் அடக்கம். இதன்பிறகு களமிறங்கிய இஷான் கிஷன், தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்ற எந்தவித பயமும் இன்றி, அவர் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார்.

மெகா வெற்றி
இஷான் கிஷன் தன் பங்குக்கு 42 பந்துகளில் 59 ரன்களை விளாசி அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம். பிறகு மெல்ல மெல்ல கேப்டன் தவான் தனது கியரை மாற்றி அவரும் அரைசதம் அடித்தார். இறுதியில், அவர் 86 ரன்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி 36.4வது ஓவரிலயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

1-0 என முன்னிலை
இந்த போட்டியில், பவுலிங்கில் இலங்கை அணியால் துளி கூட இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையின் ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் என இரு பந்துவீச்சையும், இந்திய வீரர்கள் பாரபட்சம் பார்க்காமல் விளாசினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











