Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவர் திரில்லர்.. 2 ரன்னில் இந்தியா திரில் வெற்றி.. அறிமுக போட்டியில் சிவம் மவி அபாரம்

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விளையாடிய இலங்கை அணி முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார்கள்.

இந்திய அணியும் பேட்டிங்கில் தடுமாற, இறுதியில் சாஹல், அக்சர் பட்டேல் ஜோடி 29 பந்துகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்தனர். மும்பை ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை . மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து செயல்பட்டது.

இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று நினைத்து அதிரடியாக விளையாடி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தனர் .

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 16 ரன்கள் சேர்த்தார். எனினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகமார் யாதவ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று சஞ்சு சாம்சன் தனஞ்செய்யா டி சில்வா ஓவரை தூககி அடிக்க முயன்று, 5 ரன்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

தீபக் அக்சர் அபாரம்

தீபக் அக்சர் அபாரம்

இதனையடுத்து ஒரு பக்கம் அதிரடியாக விளையாட முயன்ற இஷான் கிஷன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய கட்டத்தில் 29 ரன்களில் வெளியேறினார். இறுதியில்23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தீபக் ஹூடா 41 ரன்கள் விளாசினார். இதில் ஒரு பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும். மறுமுணையில் அக்சர் பட்டேல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது.

முக்கிய விக்கெட்டுகள்

முக்கிய விக்கெட்டுகள்

இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இல்ங்கை அணியின் நிசாஙகா 1 ரன்னிலும், தனஞ்செய்ய டி சில்வா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து, அசலங்கா, மெண்டிஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அசலங்கா 12 ரன்கள் எடுத்திருந்த போது, இஷான் கிஷனின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார்.

ஷனாகா அதிரடி

ஷனாகா அதிரடி

ஐபிஎல் வீரர் ராஜபக்சா 10 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறியது. அப்போது ஹசரங்கா 21 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய ஷனாகா 27 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஷனாகா முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

கடைசி ஓவர் திரில்

கடைசி ஓவர் திரில்

அப்போது 19வது ஓவரில் நோ பால், சிக்சர் என ரன்கள் செல்ல, கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதில் அக்சர் பட்டேல் வீசிய 3வது பந்தில் கருணரத்னே சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட, கருணரத்னாவால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, January 3, 2023, 23:01 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+