Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் 3 சாதனை.. இலங்கையை பந்தாடிய இந்தியா.. ரோகித்தின் பிளானில் சரிந்த எதிரணி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இன்றைய ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதாக ரோகித் சர்மா தெரிவித்தார்

அறிமுக வீரராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.கடந்த போட்டியிலிருந்த 6 இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இல்லை.

50 ரன்கள்

50 ரன்கள்

தொடக்கம் முதலே இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். கருணரத்னே வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 5.2 வது ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இஷான் கிஷன் 43 ரன்கள் அடித்திருந்த போது இலங்கை வீரர்கள் ஒரு கேட்சை தவறவிட்டு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். 30 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். ரோகித் சர்மாவும் தனது அதிரடிய காட்டியதால் 10 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இந்த ஆட்டத்தில் ரோகித் 44 ரன்கள் அடித்தன் மூலம் 3307 ரன்களை குவித்து . சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் 25 பந்துகளில் அரைசதம் விளாச, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை இழந்தது. காமில் மிஸ்ஹரா, ஜெனித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திமால் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

Recommended Video

Rohit Sharma's Challenges as the India's Test captain | OneIndia Tamil
தொடர் வெற்றி

தொடர் வெற்றி

கேப்டன் சனாகா 3 ரன்களில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும், மறுமுனையில் அசலங்கா பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் கருணரத்னே,சமிரா ஆகியோர் போராடினாலும், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 10 டி20 போட்டியில் இந்திய அணி வென்று சாதனையை படைத்துள்ளது.இந்தப் போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

Story first published: Thursday, February 24, 2022, 23:06 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+