Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனை படைத்த இந்திய அணி..!! 2 மாதம் பிறகு தொடர் வெற்றி..!! இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

வாழ்வா சாவா ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பெரிய இலக்கை எட்டுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

முதல் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷண் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினார்.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 18 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.சொந்த மண்ணில் 100வது போட்டியில் களமிறங்கிய விராட் கோலியும் 18 ரன்களில் வெளியேற, இந்திய அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஜோடி தத்தளித்த இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 49 ரன்களில் ரன் அவுட்டாகினார். எனினும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் 24 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி சரிவை கண்டது.

தீபக் ஹூடா 29 ரன்கள் எடுக்க, இந்திய அணி 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களை மட்டுமே எடுத்தது.

பிரஷித் கிருஷ்ணா

பிரஷித் கிருஷ்ணா

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் சாய் ஹோப் 27 ரன்களில் ஆட்டமிழக்க, பிராண்டன் கிங் 18 ரன்கள் வெளியேறினார். குறிப்பாக வேகப்பந்துவிச்சாளர் பிரஷித் கிருஷணா அபாரமாக பந்துவீசி 4 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

தொடரை வென்ற இந்தியா

தொடரை வென்ற இந்தியா

எனினும் புருக்ஸ் அதிரடியாக 44 ரன்கள் எடுக்க,அகேல் ஹூசைன் 34 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்திற்குள் மீண்டும் வந்தது. இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஓடியன் ஸ்மித் அதிரடியாக விளையாட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இருப்பினும் வாசிங்டன் சுந்தரை வைத்து ஓடியன் ஸ்மித் விக்கெட்டை ரோகித் சாய்த்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்களில் சுருண்டது. பிரசித் கிருஷ்ணா 9 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கடந்த 15 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றது இல்லை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து 11 ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.

Story first published: Wednesday, February 9, 2022, 21:58 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+