Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1000வது ஒருநாள் போட்டியில் வெற்றி கொடியை ஏந்திய ரோகித் படை.. வெள்ளை கொடி ஏந்திய பொலார்ட்.. IND vs WI

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ஆயிரமாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்,

இந்தப் போட்டியில் தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், சாஹல், இஷான் கிஷணுக்கு ரோகித் வாய்ப்பு வழங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தனர்.

வாசிங்டன் அபாரம்

வாசிங்டன் அபாரம்

முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் ஷாய் ஹோப் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பவுண்டரியை அவர் அடிக்க முற்பட்ட போது, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனை தொடர்ந்து வாசிங்டன் சுந்தர் பந்துவீச வந்தார். அப்போது பொறுப்புடன் விளையாடிய பிராண்டன் கிங் வேகமாக அடிக்க முயன்ற போது சூரியகுமார் யாதவிடம் 13 ரன்களில் பிடிப்பட்டார். இதனையடுத்து அதே ஓவரில் டேரன் பிராவோ 18 ரன்களில் எல்.பி,டபிள்யூ ஆனார். இதன் மூலம் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வாசிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

சாஹல் 100

சாஹல் 100

சாஹல் வீசிய முதல் ஓவரில் நிக்கோலஸ் பூரான் ஆடட்டமிழந்தார். இது சாஹலின் சர்வதேச ஒருநாள் போட்டியின் 100 வது விக்கெட் ஆகும். இதனை தொடர்ந்து அடுத்த பந்திலேயே பொலார்ட் டக் அவுட்டாகி வெளியேற, புருக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 79 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜேசன் ஹோல்டர், ஃபெபியன் ஆலன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய ஹோல்டர் அரைசதம் விளாச, ஃபெபியன் ஆலன் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 176 ரன்களுக்கு சுருண்டது. சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்த, வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

முழு நேர கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா, அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் பத்து பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 28 ரன்களில் வெளியேற, நட்சத்திர வீரர் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 11 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். ஹூடா 26 ரன்களும், சூரியாகுமார் யாதவ் 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலைவ பெற்றது.

Story first published: Sunday, February 6, 2022, 20:22 [IST]
Other articles published on Feb 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+